Monday 7 August 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.
ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு அணுமின்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியது.
கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு மீத்தேனுக்கெதிரா போராடவேண்டியது.
பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.
விவசாயமே செய்யாது விவசாயத்திற்காதரவாக போராட்டம்.
மாடு வெட்டி திண்ணுட்டு மாட்டுக்காதரவாக போராட்டம்.
சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு சாதிக்கெதிரா போராட்டம்.
இந்துமதத்தை மட்டும் இழிவுபடித்திகிட்டு மதசார்பிண்மைக்காதவாக போராட்டம்.
பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு ஊழலக்கெதிராக போராட்டம்.
மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு மதுக்கெதிரா போராட்டம்.
நீர்நிலைகளையெல்லாம் மாசுபடித்து அழித்துவிட்டு நீருக்காதவராக போராட்டம்.
அரசிற்கு வரியே கட்டாமல் வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.
அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை மூன்றே மூன்று ஆண்டுகள் கடந்து ஆட்சி செய்யும் மோடிதான் எல்லாத்திற்கும் காரணம்னு சொல்லும்பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment