Tuesday 21 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

லோக்சபாவில் இருந்து விடைபெற்று உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை ஏற்கும் நிலையில், உணர்ச்சிகரமான தன் உரையை சற்று முன் அவையில் (லோக்சபா) நிகழ்த்தினார் யோகி ஆதித்யநாத்.
எனக்கு பிரதமர் மிகப்பெரும் பொறுப்பை அளித்துள்ளார். அவரின் வழியில் நான் அனைவரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன். நான் ராகுல் காந்தியை விட ஒரு வயது இளையவன், அகிலேஷ் யாதவை விட ஒரு வயது மூத்தவன் அவர்களின் இருவரின் இடையில் நான் இருக்கிறேன் :) இனி எங்களுடைய ஆட்சியில் குண்டா ராஜ்ஜியம் இருக்காது, பெண்கள் பாதுக்காப்பாக செல்லக் கூடிய நிலையை உருவாக்குவோம். மத ரீதியான, சாதி ரீதியான பாரபட்சம் இருக்காது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். கோரக்பூரில் நலிந்து கிடந்த உரத் தொழிற்சாலைகளை எங்கள் கோரிக்கையை ஏற்று மோடி அவர்கள் சீராக்கி தந்தார். அது போல உத்தரபிரதேசத்தில் நலிவடைந்துள்ள தொழிற்சாலைகளை நாங்கள் சீராக்குவோம். எங்கள் அரசு அனைவருக்குமானது. அனைத்து தரப்பினரும் அதில் வளர்ச்சியை கிடைக்கப் பெறுவார்கள். மக்களுக்காக நாங்கள் அயராது பாடுபடுவோம்.
Prakash p

No comments:

Post a Comment