Monday 20 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*ஜென் கதை - தங்க நிறக் காற்று*
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தன் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறை வழியில் வாழ்வை செலுத்தவும் விருப்பம். ‘அதற்கு என்ன செய்வது?’ என்று வழி தேடியவன், ஜென் குரு ஒருவரை சந்தித்தான். தன்னுடைய விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியவன், ‘குருவே! நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.
மன்னனின் விருப்பத்தைக் கேட்ட அந்த குரு, ‘நீ ஒரு தோட்டம் போடு’ என்றார்.
‘தோட்டம் போட்ட பிறகு என்ன செய்வது?’ என்று கேள்வி கேட்டான் மன்னன்.
‘நீர் பாய்ச்சு.. பிறகு மரம் வளர்.. அதன் பிறகு அந்த மரங்களை பராமரித்து வா..’ என்றார் குரு.
குரு ஒரு விஷயம் சொல்கிறார் என்றால், அதில் ஆயிரம் பொருள் புதைந்திருக்கும் என்பதை உணர்ந்த மன்னன், தன்னுடைய அரண்மனை திரும்பினான். அரண்மனைக்கு அருகிலேயே பெரிய இடத்தில் தோட்டம் உருவாக்கத் தொடங்கினான். ஆயிரக்கணக்கானவர்களின் துணையுடன் இதற்கான பணியில் ஈடுபட்டான்.
ஒரு சில ஆண்டுகள் பெரும்பாடு பட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது. பல மரங்கள் பல்வேறு வண்ண பூக்களுடன் பூத்துக் குலுங்கின. பார்க்கும் போதே அந்த இடம் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. அத்துடன் மிக ரம்மியமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.
மன்னன், ஒரு நாள் குருவை சந்திக்கச் சென்றான். தான் ஒரு தோட்டத்தை உருவாக்கி விட்டதாகவும், அந்தத் தோட்டத்தை வந்து பார்வையிடும்படியும் குருவை அழைத்தான். அவரும் மறுநாள் வருவதாக கூறினார்.
குருவை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான் மன்னன். தன் பணியாளர்களை வருத்தி எடுத்து, அங்கிருந்த காய்ந்த சருகுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினான். காய்ந்த சுள்ளிகள், சருகுகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் மிகவும் தூய்மையாக பளிச்சென்று காட்சி தந்தது.
சிறிது நேரத்தில் குரு வந்தார். மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான். தான் உருவாக்கிய தோட்டத்தை சுற்றிக் காண்பித்தான். தூய்மையாக வைத்திருப்பதைப் பார்த்து, குரு தன்னை பாராட்டுவார் என்று மன்னன் மிகவும் ஆவலோடு காத்திருந்தான்.
ஆனால் அவரது முகத்தில் கோபமும், வருத்தமும் மட்டுமே தென்பட்டது.
இதைக் கண்ட மன்னன், ‘குருவே! தோட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டான்.
‘எல்லாம் சரிதான்.. தூய்மையான தங்கக் காற்றைக் காணவில்லையே?.. எங்கே அந்த புனிதமான பொன்னிறக் காற்று?’ என்றார் துறவி.
மன்னனுக்கு எதுவும் புரியவில்லை. குரு எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக ஓடினார். இறுதியாக ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளி வந்து தோட்டத்திற்குள் கொட்டினார். அந்த நேரம் பார்த்து வீசிய காற்றில், மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் சுழன்று பறந்தோடின.
அதைக் கண்ட குரு, ‘பிரமாதம்.. இது தானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று.. இப்போது பார்.. உன்னுடைய தோட்டம் உயிரோட்டமாக மாறிவிட்டது’ என்றார் குதூகலமாக.
பின்னர் மன்னனிடம் கூறினார், ‘நாள் என்பது பகல் மட்டுமல்ல.. இரவும்தான். மரணம் வாழ்க்கைக்கு எதிரி இல்லை. அதுவும் வாழ்வின் ஒரு அங்கம். அதுபோலவே தோட்டத்தில் இருக்கும் இந்த சருகுகளும், பழுத்த இலைகளும்..
எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தியானம் என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி.. வெற்றி கொள்வது அல்ல.. 'அதனைக் கடந்து சென்றுவிடுவதே’ என்றார்.
ஒரு காலத்துல பேப்பர் படிச்சா உலக விஷயங்கள் தெரியும்.இப்போ கூகிள்,whatsup என்று பல தகவல்கள் நம்மை தேடி வருகின்றன.
இதை சாப்பிடாதீங்க ,அதை குடிக்காதீங்க ,இதுல அதை கலக்குறான்,அதுல இதை கலக்குறாரான்னு சொல்லி நம்ம வயித்த கலக்குறாங்க.
அரிசி சோறு சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.
அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.
சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா பூச்சி மருந்து தெளிக்கறாங்க ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.
இப்ப என்னடான்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.
என்னடா இது அக்கப்போருன்னு வெறும் பச்ச தண்ணி குடிக்கலாம்னா "ஆபத்து R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு ஹேமமாலினி சொன்னாங்க.சரி நல்ல நல்ல புடவை கட்டிக்கிட்டு வந்து சொல்ராங்கலேன்னு ஒரு மெஷினே வாங்கி மாட்டினோம்.உடனே அதல சத்து இல்ல ,எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது.
மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப்."மாடில தோட்டம் போடு,உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழி வளர்த்தா முட்டையும் சிக்கனும் கிடைக்கும்,தண்ணிய கொதிக்க வச்ச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராது" ன்னுச்சு
அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா வாழ்ந்தோம், பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வைச்சுட்டு இப்ப திருப்பி அதையே சொல்றீங்களேடா?
முன்ன மாதிரி பேப்பர் மட்டும் படிச்சுட்டு இந்த facebook ,வாட்ஸுப் எல்லாம் மூட்ட கட்டிட்டு பழைய கருப்பு கலர் போன் ஒண்ணா வாங்கி வச்சு நிம்மதியா தூங்குங்க.
என்ன நான் சொல்றது சரிதானே? 🤔🤔🤔
- *சித்தர்களின் குரல் shiva shangar*
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment