Monday 6 March 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

#மறக்க_இயலா_சுஜாதாவின்_வரிகள் 
“ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும் கித்தார் வாசித்து உலகை வெல்லவும் நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன் . நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு , எளிமையாக்கப்பட்டு , எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாய் பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகின்றேன், வாழ்க்கை இவ்வகையில் ப்ரொக்ரஸீவ் காம்ப்ரமைஸ் ( படிப்படியான சமரசங்களால் ஆனது ) இன்றைய தினத்தில் என் டாப் டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால் ,, முதலிடத்தில் உடல்நலம் , மனநலம் , மற்றவருக்கு தொந்தரவு தராமல் இருப்பது , இன்சொல் அனுதாபம், நல்ல காபி , நகைச்சுவை உணர்வு , நான்கு பக்கமாவது படிப்பது எழுதுவது ..இந்தப் பட்டியலில் பணம் இல்லை”,
----- கற்றதும் பெற்றதும் - சுஜாதா

No comments:

Post a Comment