Monday 24 April 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வெற்றிக்கு வழிவகுக்கும் 3 அத்தியாவசிய விடயங்கள்!*
ஆரோக்கியமான மனிதர்கள் வலிமையுடன், புத்திக் கூர்மையுடனும் செயல்படுவார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பணிக்குச் செல்லும் நாம் உடல்நலத்தை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உடல்நலத்தை பாதுகாத்து, வாழ்வில் வெற்றியடைவதற்கு தேவையான அத்தியாவசியமுள்ள 3 விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
உடல்நலத்தை பாதுகாக்கும் தலையாய காரணியாக விளங்குவது உணவு. உண்ணும் உணவை தக்க நேரத்தில், குறைந்த கொழுப்புள்ள உணவுடன், பழங்கள் உட்கொண்டால் மனதில் மகிழ்ச்சி உண்டாகி புத்துணர்ச்சியுடன் பணியில் ஈடுபடுவோம். அது நமது பணியை தெளிவாக செய்ய வைத்து வெற்றிக்கு வழிவகுக்கிறது.
நேர வரைமுறையின்றி பணியாற்றுபவர்கள் சரியான நேர அளவில் உறங்க வேண்டும். காலையில் சீக்கிரமாகவே பணிக்கைச் சென்றுவிட்டு இரவு தாமதமாக வருபவர்கள் வீட்டில் வந்தும் லேப்டாப்பை வைத்து பணிபுரிந்துவிட்டு சிறிது நேரம் மட்டுமே உறங்குவார்கள்.
தூக்கம் உங்களது அசதியை குறைக்கும், மன அழுத்தத்தை போக்கும், உயர் ரத்த அழுத்தம், குறைந்த மூளை செயல்பாடு உள்ளிட்டவைக்கு நிரந்தர தீர்வு காண செய்வது இடையூறு இல்லாத உறக்கம். சராசரியாக மனிதர்கள் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
நல்ல உணவு முறை,உறக்கம் மட்டும் மனிதரின் வெற்றிக்கு காரணமாக அமையும் .என்று கூறிவிட முடியாது. சுறுசுறுப்புடன் இருக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினசரி குடும்பம் மட்டும் அலுவலக பணியினால் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மனதையும், உடலையும் ஒரு சேர கவனித்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்கலாம். ஆரோக்கியமான வாழ்வே வெற்றிக்கான அடித்தளம் ஆகும்.

No comments:

Post a Comment