Tuesday 11 April 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மத்திய அரசின் மெளனம் பலவீனமானது
இத்தனை நாட்கள் தில்லியில் போராடியும், அவர்களை சீந்த மறுக்கிறார் மோடி என்றால்,
இருக்கும் எல்லாவற்றையும் இழந்து, இப்போது கடைசிக் கோவணத்தையும் கழற்றி எறிந்தார்கள் தமிழக விவசாயிகள் என்றால்,
குறித்துவைத்துக்கொள்ளுங்கள், இந்த நாள் எதிர்கால தமிழக வரலாற்றில் ஒரு நிலைமாறு புள்ளி என்று பேசப்படும். இந்திய வரலாற்றிலும்கூட.
நிர்வாணமானது தமிழக விவசாயிகள் அல்ல, தில்லிப் பேரரசு.
பிரதமரின் அலுவலகத்தை நோக்கிச் செல்லும் சாலைகளில் இன்று தமிழன் யார் மீதான தனது நம்பிக்கையை இழந்திருக்கிறான் என்பதை வரலாறு பதிவுசெய்யும்.
28 நாள் என்னென்னவோ செய்துபார்த்தும் முயன்றும் அவர்களிடம் பேச மறுக்கிறார் ஒரு பிரதமர்.
வாக்கு வங்கி அரசியல்கூட இங்கே வேலைசெய்யவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுமே என்று நினைத்துக்கூட மோடி அவர்களைச் சந்தித்திருக்கலாம். அதைக்கூட அவர் செய்யவில்லை. ஒரு நாடகத்தை நடிக்கக்கூட அவரால் முடியவில்லை. மற்றவர்கள் நடத்திய நாடகத்தை அவரும்தான் பார்த்தார்.
உங்களை நான் சந்திக்கமாட்டேன் என்று ஒரு சர்வாதிகாரிக்கே உரிய திமிரோடு நடந்துகொண்டிருக்கிறார் மோடி.
உங்களோடு வாழ்வதே பெரிய விஷயம் என்று தருண் விஜய் கூறியதை தன் நடத்தையால் உறுதிசெய்திருக்கிறார் நரேந்தர தாமோதர மோடி.
இதுதான் மோடி, இதுதான் தில்லி, இதுதான் இந்தியா.
எழுதிவைத்துக்கொள்ளுங்கள் இந்திய தேசபக்தர்களே. நீங்கள் மிகப்பெரிய தவறை செய்திருக்கிறீர்கள். மிகப்பெரிய தவறை.
எனது விவசாயிகள் மனத்தில் இப்போது என்னென்ன எண்ணங்கள் ஓடும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
தமிழகத்தை அந்நியப்படுத்துவதையே தனது ஒரே கடமையாகச் செய்துகொண்டிருக்கும் மோடி அரசுக்கு எதிராக தமிழகம் அணிதிரளத்தான் போகிறது.
எனது விவசாயி கோவணத்தை கழற்றியெறிந்த அத்தருணம் நூறாயிரம் கோடி விதைகள் தமிழகத்தில் தூவப்பட்டிருக்கின்றன. விதைகள். விதைகள்.
கடந்த ஒரு மாதத்தில்மட்டும் எத்தனை மோதல் புள்ளிகள் மோடி அரசுடன்?
தமிழகத்தின் அந்நியமாதல் தொடங்கிவிட்டது. இதை பிரிவினைவாதம் என்று முத்திரை குத்துவோர் குத்துங்கள். ஆனால் இந்தியப் பேரரசின் அஸ்தமனத்துக்கு மோடியின் தலைமையிலான இந்த அரசுதான் மிகப்பெரிய காரணமாக இருக்கப்போகிறது என்பதையும் சேர்த்துச்சொல்லுங்கள்.
கோவணத்தை கழட்டி வீசிய விவசாயி உங்களை முழுக்க நிர்வாணப்படுத்தியிருக்கிறான். அவன் வீடு திரும்பும்போது அவன் மனத்தில் மீதியிருக்கப்போகும் எண்ணங்கள் அனைத்தும் அவமானங்களால் நிறைந்திருக்கும், ஏமாற்றத்தால் நிறைந்திருக்கும்.
அவன் விரைவில் நிலத்தில் இறங்கத்தான் போகிறான். விழந்த அந்த நூறாயிரம் கோடி விதைகளை தன் கண்ணீராலும் செந்நீராலும் வளர்க்கத்தான் போகிறான்.
பேரரசுகள் எப்போதுமே தவறுகளைச் செய்வதில்லை, அவை பெருந்தவறுகளையை மட்டுமே செய்கின்றன.
ஆழி செந்தில்நாதன்

No comments:

Post a Comment