Monday 17 April 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மெளனத்தை புரிவதை பற்றி ஒரு பார்வை: -
🌷நமக்கு கேள்விகள் தோன்றும் வரை மெளனத்தை புரிந்து கொள்வது கடினமான ஒன்று. அதனால் தான் ரமண மகரிஷி *சும்மா இரு* என்று கூறுகிறார்..!
🌷மெளனத்தை உணர்ந்த ஒருவர் முழுமையடைந்தவர் ஆவர். அப்படி முழுமை அடைந்த ஒருவரால் மட்டுமே மற்றவர்க்கு மெளனத்தை புரிய வைக்க முடியும்.
🌷நம் இந்த உலகியல் வாழ்வில் சிக்கியதால் தினசரி வாழ்வில் 1000 கேள்விகளுக்கு பதில் தேடும் மனிதர்களாய் தான் உள்ளோம். இதனால் உடலின் ஆரோக்கியமும் மன நிம்மதியும் எளிதில் கெட்டு போய் விடுகிறது.
🌷நாம் ஏதாவது பிரச்சனையை சந்திக்கும் போது மட்டும் தான் மெளனத்தை தேடி போகிறோம். அப்படி போகும் மக்கள் *மெளனத்தை உணர்ந்து* மெளனமாய் சும்மா இருக்கும் ஒருவரை சந்திக்கும் போது அவர் அனுகும் விதம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
🌷1000 கேள்விகள் நாம் இருக்கும் சூழ்நிலையில் எப்போதும் தோன்றி கொண்டு இருக்கும். மற்றும் நாம் நம்மை அந்த சூழ்நிலையில் இருந்து தனிமை படுத்தி கொள்ள மாட்டோம்.
🌷இப்போழுது மெளனத்தை உணர்ந்தவரை அவர் இருக்கும் இடத்தில் அவரை சந்திக்கும் போது அந்த சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டு இருக்கும் முடிந்த அளவு அதில் நாம் தனித்து விடப்பட்டு இருப்போம்.
🌷அதன் பிறகு நாம் முதலில் இருந்த குழ்நிலையில் தோன்றும் கேள்விகள் இந்த சூழ்நிலையில் நமக்கு தோன்றுவதில்லை மாறாக கேள்விகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதையும் நாம் உணரலாம்.
🌷இப்படியே அவரை சந்திக்கும் போது கேள்வி குறைந்து கொண்டே வரும் ஒரு கட்டத்தில் அவரிடம் உள்ள எல்லா கேள்வியும் குறைந்து இறுதியில் *"நான் யார்"* என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் அவருக்குள் எஞ்சியிருக்கும் அந்த சமயம் மட்டும் அவர் பதில் கூறி உணர்வதற்கு வழி காட்டுவார்.
🌷பிரச்சனையில் இருக்கும் மனிதரிடம் கேள்வி என்ற எண்ணம் உதித்து கொண்டே இருக்கும் அவருக்கு பதில் கூறினாலும் மீண்டும் அதில் இருந்து கேள்வியை தான் அவருக்கு உதிக்கும் ஆகையால் கேள்வி உதிப்பதை முதலில் நிறுத்தப்படுகிறது இதற்கு மெளனத்தை உணர்ந்தவர் இருக்கும் சூழ்நிலை மிகவும் உதவுகிறது மேலும் அதனால் கேள்வி என்ற எண்ணம் படிப்படியாக அடங்குகிறது..!
நன்றி
குரு வார்ப்பணம்

No comments:

Post a Comment