Friday 16 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கீதையின் 18 அதிகாரங்களின் சாராம்சம்.
அதிகாரம் 1) தவறான சிந்தனைகளே நம் துன்பங்களுக்கு அடிப்படை காரணம்.
அதிகாரம் 2) தூய்மையான அறிவே நம் துன்பங்களில் இருந்து விடுபட இறுதி வழி .
அதிகாரம் 3) தன்னலத்தை அகற்றுவது மட்டுமே வாழ்க்கையில் செழிப்படைந்து முன்னேற ஒரே வழி .
அதிகாரம் 4) பிரார்த்தனை என்பது வெற்று வார்த்தைகளல்ல. நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பிரார்தனை.
அதிகாரம் 5) ஜீவாத்மா கொள்ளும் ஆணவத்தைக் களைந்து பரமாத்மாவுடன் ஒன்றிணைந்து மகிழ்ந்து ஆனந்தமாயிரு.
அதிகாரம் 6) பரமாத்மாவுடன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத இணைப்பை அன்றாடம் நினைவு கூர்ந்திரு.
அதிகாரம் 7) அனுபவங்கள் கற்றுத் தந்த படிப்பினைகளை உணர்ந்து அதன் படி வாழ்.
அதிகாரம் 8) வாழும் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தாகத்தை ஒருநாளும் கைவிடாதே.
அதிகாரம் 9) உனக்கு வழங்கப் பட்டுள்ள ஆசீர்வாதங்களை மதி.
அதிகாரம் 10) இறைசக்தியை உன்னைச் சுற்றிலும் எங்கெங்கும் கண்டுணர் .
அதிகாரம் 11) உள்ளதை உள்ளவாறு பார்த்து உண்மையை உணரும் அளவுக்கு உன்னை அர்ப்பணி.
அதிகாரம் 12) எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைசக்தியில் கரைந்து மறைந்து விடு.
அதிகாரம் 13) உலகின் பொய்த்தோற்றம் உன்னைக் கட்டியிருக்கும் கட்டுக்களை அறுத்து மெய்யான இறைசக்தியுடன் தொடர்ந்து இணைந்திரு.
அதிகாரம் 14) உன் மனசாட்சி உனக்கு காட்டும் வாழ்க்கையை வாழப் பழகு.
அதிகாரம் 15) இறைசக்தி உன்னில் செயலாற்ற முன்னுரிமை கொடு.
அதிகாரம் 16) நல்லவனாய் இருப்பதே அதற்க்கான வெகுமதி. நல்லவனாய் இருப்பதற்கு வேறு வெகுமதிகளை எதிர்நோக்கதே.
அதிகாரம் 17) இன்பம் தரும் செயல்களை மட்டுமே செய்வதைத் தவிர்த்து சரியான செயல்கள் செய்வதைத் தேர்ந்தெடு.
அதிகாரம் 18) பரம்பொருளாம் இறைவனிடம் இணையப் போகும் நாளை மகிழ்வுடன் எதிர்நோக்கி முன்னேறு.
நன்றி ஆா் பாஸ்கர்

No comments:

Post a Comment