Tuesday 23 August 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💥 வெற்றி - ஒரு தொகுப்பு !!!
🔵இந்த கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள்.
🔵எட்டிபிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டுவிட முடியும்.
நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை...
🔵சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார்.மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் புதிதாய் சேர்ந்திருந்தச் சீடன் ஒருவன் " இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா? " என்றான்.
🔵அதற்கென்ன பத்து வருடங்களில் தயார் செய்து விடுகிறேன் என்றார் குரு.என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே மற்றவர்களை விட இரண்டு மடங்கு உழைக்கத் தயாராயிருக்கிறேன்.
" அப்படியானால் இருபது வருடங்களாகும் " என்றார் சான்ஸூ.
சீடன் திகைத்தான். போதாது என்றால் இன்னும் நான்கு மடங்கு கடுமையாக உழைக்கிறேன் என்றான்.
அப்படிச் செய்தால் நாற்பது வருடங்களாகுமே என்றார் குரு.
🔵ஆம்...! உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள...நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலமாகும். இதைத் தான் சான்ஸூ அந்த சீடனுக்கு புரிய வைத்தார்.
🔵கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம் ஆனால், அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.
உலகின் அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த பொழுது தான் நிகழ்ந்திருக்கின்றன.
🔵மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் கீழே தரையில் விழுவதைக் கலனித்த நியூட்டன் புவிஈர்ப்பு பற்றிய விதியைக் கண்டு பிடித்தார்.
🔵'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருக்கும் போதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்த்தார் ஆர்க்மிடீஸ்.
🔵கவனித்துப் பாருங்கள் விளையாட்டில்கூட வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்
நன்றி பாஸ்கர் ள்.
🔵வெற்றி...வெற்றி.. என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.
🔵" வெற்றியைப் பற்றிய அச்சத்தை விட்டுவிட்டு மன அமைதியுடன் ரசித்து முழு ஈடுபாட்டுடன் பணிகளைச் செய்யும் போது தான் மூளை தன் உச்ச திறனுடன் செயலாற்றி வெற்றியை சுலபமாய் ஈட்டித்தரும் என்கிற உண்மையை நீங்கள் உணரமுடியும் ".
நன்றி:- Whatsapp

No comments:

Post a Comment