Wednesday 7 August 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனதார நன்றி சொல்லுங்கள் ...
1)நன்றி என்பது ஒரு அழகிய தமிழ் வார்த்தை .அதை பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன் படுத்தும் போது அந்த நன்றியும் அழகாக ஆகின்றது. நன்றி வெறும் வாயின் வழியாக மட்டும் புறப்படக் கூடாது ஆழ்மனதிலிருந்து இதயத்தின் வழியாக புறப்பட வேண்டும்.
2)முதலில் படைத்தவரான தந்தை ஈசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அடுத்து பெற்றோர்களான தாய், தந்தையருக்கு அடுத்து நமது ஆசிரியர் மற்றும் குருவுக்கு நம்மைப் பேணிக்காக்கும் இயற்கை அன்னைக்கு நம்முடன் கூடவே இருக்கும் இந்த உடலுக்கு .நன்றி என்பது ஆசீர்வாதம் நிறைந்த கர்மாவின் பிரதிபலிப்பாகும்.
3)நன்றி என்பது வாயளவில் சொல்வதை விட செயலில் காண்பிப்பதாகும். நம்முடன் கலந்த இயற்கை காற்றாக நமது சுவாசத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரானது நமது தாகத்தை தனித்து நமக்கு உணவு விளைவிப்பதில் முக்கிய பங்காற்றி நமது புற உறுப்புகளை சுத்தம் செய்வதிலும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. நெருப்பு இல்லை என்றால் உணவு சுவையாக சமைப்பது எப்படி
சூரியனின் அக்னி தானே ஆக்கல் மற்றும் அழித்தல் காரியத்தில் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது.நிலம் இல்லை என்றால் பயிர்கள் விளைவது எப்படி? நிலத்தில் தானே நம்மை தாங்கிப் பிடித்திருக்கும் வீடுகளை அமைக்கின்றோம். நிலம் தானே மனித வாழ்விற்கு ஏற்ற உறைவிடம். ஆகாயம் இல்லை என்றால் ஆராய்ச்சி எப்படி துவங்கும். ஆகாயத்தில் தான் மேகங்கள் பறந்து மழையாக பொழிந்து பூமியை செழிப்புறச் செய்கின்றது. இறைவனின் இருப்பிடத்தை காண நினைப்பவர் ஆகாயத்தை நோக்கி அல்லவா பார்க்கின்றார். ஆகாயம் என்பது பிரபஞ்சத்தின் அதிசயங்களை வெளிப்படுத்தும் அற்புத இடம். ஆக, எந்த சுயநலமும் இல்லாமல் நமக்கு உதவக்கூடிய இந்த ஐந்து தத்துவங்களான இயற்கைக்கும் நாம் மனதார ஒவ்வொரு நிமிடமும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
நமது நன்றி என்பது அந்த இயற்கையை எவ்விதத்திலும் துன்புறுத்தாமல் இருப்பதே யாகும்.
4)புலால் உண்ணாதவர்களை விலங்குகளும் பறவைகளும் நன்றியுடன் வணங்கும். பொறுமை உடையவரே அனைத்து நன்றிகளுக்கும் ஏற்புடையவர். நிதானம் உடையவர் நன்றியின் சரித்திரம் ஆவார். சமாதானத்தை ஏற்படுத்துபவர் நன்றிக்கு நாயகன் ஆவார். கடும் வார்த்தை பேசாதவரை நன்றியால் உலகம் போற்றும். நிகழ்காலத்தில் நீங்கள் செய்யும் காரியம் உயர்ந்ததாக இருக்கும் பொழுது அது சரித்திரத்தில் நன்றிக்குறியதாக தன்னால் ஆகின்றது .ஏனென்றால் உங்கள் உயர்ந்த காரியங்களை பின்பற்றுபவர்களாக உலகில் நிறைய பேர் உருவாகுவார்கள்.
5)சிலருக்கு மனதால் நன்றி சொல்லுங்கள். சிலருக்கு செயலால் நன்றி சொல்லுங்கள். நன்றி என்பது மிக அழகிய வார்த்தை அதை அழகானவர்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பது அவர்களுக்கு செலுத்தும் நன்றி. ஆசிரியரின் பெயரை காப்பாற்றி கொடுப்பது அவருக்கு செலுத்தும் நன்றி.கலைகளில் நாம் வெற்றி பெற்று காண்பிப்பது நாம் குருவுக்கு செலுத்தும் நன்றி.உணவு உடை இருப்பிடம் என்று சகலத்தையும் கொடுத்து நம்மை காப்பாற்றி எல்லாம் தந்த தந்தை ஈசனுக்கு செலுத்துவதே மிகப்பெரிய நன்றியாகும். ஒவ்வொன்றிலும் தர்மத்தின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப மனிதன் நடந்து இறைவனை அடைவதே நாம் இந்த உலகில் வாழ்வதற்கான நன்றிக் கடனாகும். நல்லது. வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment