Thursday 29 June 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன. திருக்குறளில் கூட, உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது, பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
அக்காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். தூவல்(பேனா), காகிதம் இல்லாத காலம் அது. அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும். கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. எனவே வளைவுக் கோடும், நேர்க்கோடும் சரியாக எழுத, ஓலையும் எழுத்தாணியும் தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின் கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஒரு வளைவு கோடும், ஒரு நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார்.
இன்று நாம் எழுத ஓலைச் சுவடியைப் பயன்படுத்த வில்லையென்றாலும், அன்றுபோல் இன்றும் தமிழர்களாகிய நாம், இந்த உ இடுவது வழக்கத்தில் இருந்த வருகிறது.
நன்றி தி௫ ஏ ஆா் லெட்சுமணன்

No comments:

Post a Comment