Saturday 14 May 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அதிமுக அரசு (2011 - 2016) செய்தது என்ன ?
நான் ஏன் அதிமுகவிற்கு ஓட்டுப்போட வேண்டும்?
2011 - 2016 அதிமுக அரசின் சாதனைகளில் சில..
மின்வெட்டில் மூழ்கியிருந்த தமிழகத்தில் இன்று மின்வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்படுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவது அதிமுக அரசு.
சுமார் 7500 மெகாவாட் மின்சாரம் கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
Electricity transmission and distribution infrastructure in Tamil Nadu has been strengthened at a cost of Rs. 9,639.36 crores with 252 new sub-stations.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்திட புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது இன்றியமையாததாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 252 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, மின்கடவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மட்டும் ரூ.9,639.36 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எண்ணூர் விரிவாக்கப்பட்ட அனல் மின் உற்பத்தித் திட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றைக் கொண்ட வடசென்னை அனல் மின் உற்பத்தித் திட்டத்தின் மூன்றாவது நிலைக்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய திட்டங்கள் : ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் உற்பத்தித் திட்டம், கடலாடி அனல் மின்உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின்உற்பத்தித் திட்டம், எண்ணூர் மாற்று அனல் மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின்உற்பத்தித் திட்டம், சில்லஹல்லா நீர் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈழ மக்கள் நலன் பேணும் வகையில் வலிமைமிக்க பல தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழில்துறை
2010 - 2011 திமுக அரசு காலத்தில் 79,413 கோடி ரூபாயாக இருந்த அரசின் மொத்த வருவாய் 2015-2016 அதிமுக அரசு காலத்தில் 1,52,004 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
"மாநிலத்தின் உற்பத்தித் திறன்" 2007-2011 திமுக அரசு காலத்தில் 584,896 கோடி ரூபாயாக இருந்தது. இது 976,703 கோடி ரூபாயாக 2014-2015 அதிமுக அரசு காலத்தில் உயர்ந்துள்ளது.
"தேசிய மின்னணு வன்பொருள் வெளியீட்டில் தமிழ்நாட்டின் பங்களிப்பு" 2008-2009 திமுக அரசு காலத்தில் 10% ஆக இருந்தது. இது 14.6% ஆக 2014-2015 அதிமுக அரசு காலத்தில் உயர்ந்துள்ளது.
2007-2008 திமுக அரசு காலத்தில் 7.1 பில்லியன் டாலராக இருந்த "மொத்த தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி" 2014-2015 அதிமுக அரசு காலத்தில் 13.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
"மொத்த அந்நிய நேரடி முதலீடு" 2010-2011 திமுக அரசு காலத்தில் 5% பெற்று 5ஆம் இடத்தில் இருந்தது. 2014-2015 அதிமுக அரசு காலத்தில் 7%.பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது.
"மொத்த ஏற்றுமதி" 2007-2008 திமுக அரசு காலத்தில் 20.2 பில்லியன் ஆக இருந்தது. இது 27.9 பில்லியனாக 2014-2015 அதிமுக அரசு காலத்தில் உயர்ந்துள்ளது.
படித்த இளைஞர்களின் வாழ்வு முன்னேற, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளம்பெற, தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகிட NEEDS திட்டம் (NEW ENTREPRENEUR CUM ENTERPRISE DEVELOPMENT SCHEME) கொண்டுவந்தது அதிமுக அரசு.
2011-2016 அதிமுக அரசு காலத்தில் தனியார் நிறுவனங்களுடன் இனைந்து அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,28,058 இளைஞர்களும், அரசு மற்றும் அரசுத் துறைகளில் 3,03,111 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (PF) பதிவுகளின்படி 1 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து 997 பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
விவசாயம்
உணவு உற்பத்தியில் சாதனை படைத்து இந்தியாவில் முதலிடம் பெற்றது அதிமுக அரசு.
காவிரி பிரச்சினையில் நடுவண் அமைப்பின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது, முல்லை பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்திய அதிமுக அரசு.
"உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உழவுத் தொழிலே உலகத்தின் உன்னதத் தொழில்". அத்தகைய உழவுத்தொழில் செய்யும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலன் காக்க "உழவர் பாதுகாப்பு திட்டம்" கொண்டு வந்த அம்மாவின் அதிமுக அரசு.
20,787 கோடி ருபாய் அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டம், விவசாய நிலங்கள் வழியே எரிவாயு குழாய்கள் எடுத்துச் செல்லும் திட்டம் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைத்து விற்கும் வகையில் 5 ஆண்டுகளில் 3,492 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 8,120 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 92 குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மை
Dr.J.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் சிறப்பான கிராமப்புற மேம்பாட்டு திட்டம் : "தாய் திட்டம்". (Tamil Nadu Village Habitations Improvement (THAI) Scheme)
தமிழகத்தின் 79,394 குக்கிராமங்களில் 3680 கோடி மதிப்பில் சாலை, தெருவிளக்கு, குடிதண்ணீர், அங்கன்வாடி, இடுகாடு, மைதானம், ரேசன் கடை போன்ற அனைத்து வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன.
5,695 ஏரிகளில் தூர் வாருதல், கரையை பலப்படுத்துதல், நீரியல் கட்டிமானங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் 2,870 கோடி ருபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன. 198 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 47 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
35 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுளன. மேலும் 14 இடங்களில் மீன்பிடி இறங்கு தளங்களும், 3 மீன்பிடி துறைமுகங்களும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் முழுவதும் 530 அம்மா உணவகங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.
நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி விலை ஏதுமின்றி வழங்கப்படுகின்றது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு பண்டக சாலை மற்றும் அமுதம் சிறப்பு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படுகிறது.
"பசுமை பண்ணை நுகர்வோர் கடை" : விலைவாசியை கட்டுக்குள் வைக்க அம்மாவின் மற்றுமொரு சிறப்பான திட்டம். விவசாயிகளுக்கும் பயனளிக்கும் இத்திட்டத்தில் 20% முதல் 30% வரை குறைவான விலையில் 30க்கும் மேற்பட்ட காய்கறி வகைகள் கிடைக்கின்றன.
விவசாயிகளிடமிருந்து அரசே நேரிடையாக கொள்முதல் செய்து இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைவான விலையில் கிடைக்கச்செய்கிறது.
106 அம்மா மருந்தகங்கள் மூலம் 15% குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
54 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் மளிகை பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா சிமெண்ட் மூட்டை ஒன்றிற்கு 190 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகின்றது.
மினரல் வாட்டர் எனப்படும் "அம்மா குடிநீர்" லிட்டர் ஒன்றுக்கு மானிய விலையில் 10 ருபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
முதல்கட்டமாக சென்னையில் "அம்மா குடிநீர்" திட்டத்தின் கீழ் மினரல் வாட்டர் எனப்படும் குடிநீர் விலையின்றி வழங்கப்படுகிறது.
திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
பயணத்தின் பொழுது தாய்ப்பால் கொடுக்க சிரமப்படும் தாய்மார்களின் துயர் துடைக்க அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பேருந்துநிலையங்களிலும் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கைகழுவும் வசதியுடன் "தாய்மார்கள் பாலூட்டும் அறை" அமைத்திட்டது அம்மாவின் அதிமுக அரசு.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படுகின்றது.
"அம்மா மகப்பேறு சஞ்சீவி" : 11 மூலிகை மருந்துகள் கொண்ட மருத்துவ பொக்கிஷம் தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கும் அம்மா அரசின் திட்டம்.
சுமார் 28 லட்சம் ஆடுகள் மற்றும் 60,000 கறவை மாடுகள் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவை மூலம் 42.95 லட்சம் ஆட்டுக்குட்டிகளும், 70,994 கன்றுகளும் பிறந்துள்ளன. கறவை மாடுகள் மூலம் 2.60 லட்சம் லிட்டர் பால் தினமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.
எளியோர் நலன்
ஒவ்வொரு குடும்பத்தின் கனவு : தங்களுக்கென ஒரு தனி வீடு.
இதுவரை அக்கனவு எட்டாக்கனியாக இருந்த ஏழை எளிய மக்களுக்கு, சூரிய மின்சக்தியுடன் ருபாய் 2.10 லட்சம் மதிப்பில் பசுமை வீடு வழங்கி அவர்களின் கனவை நனவாக்கியது அம்மாவின் அதிமுக அரசு.
1.34 கோடி குடும்பங்களுக்கு உலக தரமான மருத்துவ சிகிச்சை கிடைத்திட அதிமுக அரசு செயல்படுத்தி வருவது "தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம்".
இந்த காப்பிட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1,00,000 வீதம், 4 வருடங்களுக்கு ரூ 4,00,000 வழங்க வழிவகை செய்யபட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ 1,50,000 வரை வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலன்
மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்கள், சுயதொழில்முனைவொர் மற்றும் பணிபுரிவோருக்கு அதிமுக அரசு விலையில்லா இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது.
"Mobile therapy unit for special children"
அனைத்து கிராமம், நகர்ப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் வாகனங்கள் மூலம் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களின் சேவையை அதிமுக அரசு தொடங்கி நடத்திக்கொண்டுள்ளது.
மாணவர் நலன்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் நலன் காக்க அவர்களுக்கு விலையில்லா Cycle, Uniform, School bag, Shoe, Pencil set, Geometry box, Notebooks வழங்கியது அதிமுக அரசு.
"அறிவே சிறந்த செல்வம்"
ஒரு காலத்தில் வசதி படைத்தோர் மட்டுமே வாங்கிய லேப்டாப் இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச்சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு அதிமுக அரசால் விலையின்றி வழங்கப்படுகின்றது.
மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை துவங்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் முதல் புனித தோமையர் மலை வரை மற்றும் சின்னமலை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இந்த ஆண்டு துவக்கப்படும்.

No comments:

Post a Comment