Monday 25 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

யார் குற்றம்
பிரதம மந்திரி காபீட்டு திட்டம்
உண்மையிலேயே நல்ல திட்டம்
ஆனால் இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் 
எத்தனை வங்கி அதிகாரிகளுக்கு தெரியும்
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
சென்றவாரம் என் வங்கிக்கு சென்று இருந்தேன்
அப்போது ஒரு ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்
தன் கணவர் இறந்து விட்டதாகவும் அவர் கணக்கில் இருக்கும் 5000 ரூபாயை எடுக்க
அதற்கான சான்றிதழ்களுடன் வந்து இருந்தார்
வங்கி மேனேஜர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்
அந்த மேனேஜர் என் நண்பர் தான்
அந்தப் பெண் அங்கிருந்து பணம் பெறப் போகும் போது அந்த மேனஜர் மீண்டும் பாஸ்புக்கை வாங்கி பார்த்து விட்டு உன் கணவர் 7000 கடன் வாங்கி இருக்கிறார் எனவே நீ தான் 2000 கட்ட
வேண்டும் என சொல்ல அந்த பெண் அழுது விட்டார்.
உடனே நான் அந்த பாஸ் புக்கை வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது
அதை தவிர மேலும் ஒன்றும் தெரிந்தது
அந்த கணக்கில் இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் செய்யப்பட்டு இருந்தது
இதை நீங்கள் பார்க்கவில்லையா இந்த பெண்ணிற்கு 2 லட்சம் வருமே என்று சொன்னது ம்
மனிதர் பதறிவிட்டார்
சார் அந்த பெண்ணின் கணவரிடம் அந்த காப்பீட்டு திட்டபடிவங்களில் கையெழுத்து வாங்கினீர்களா இல்லை என்றால் எப்படி இந்த பணம் அவர் nominee க்கு கிடைக்கும் என்றவுடன்
அவர் தலையில் கை வைத்து கொண்டார்
பிறகு அந்த பெண்ணை அழைத்து 7000 வாங்கிக் கொள்ள அனுமதித்தார்
அந்த பெண்ணுக்கு 2 லட்சம் கிடைக்குமா என்பது தெரியவில்லை
இது தான் இன்றைய நிலை
எனக்கு தெரிந்து பெரும்பாலான வங்கிகள் இதை செய்யவில்லை
பணத்தை மட்டும் டெபிட் செய்து கணக்கு காட்டிவிட்டார்கள்
இதைப் பற்றி Indian Bankers Association க்கு கடிதம் எழுதி இருக்கிறேன்
ஒரு அரசு அதன் நல்ல திட்டங்களை கொண்டு வரத் தான் முடியும்
அதை செயல்படுத்தவேண்டிய வங்கிகள் தூங்கினால் என்ன செய்வது
இன்று காலை Modi Parishad என்ற அமைப்பு இந்த காப்பீட்டு திட்டத்தை பற்றி பதிவிட்டிருந்தது
அதை படித்தவுடன் இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்
இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம்
நம் நாட்டில் ஆந்திராவில் இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதை மக்களிடம் கொண்டு செல்லலாமே..
Forwarded as received

No comments:

Post a Comment