Saturday 30 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அன்பே சிவம்
மற்றவரை மதிப்பதே மனிதாபிமானம்
😨😨😨😨😨😨😨😨😨😨
காலையில் வாக்கிங் செல்லும் போது யாரோ முகம் தெரியாத ஒருவரை இடித்து விட்ட அவன், மன்னிச்சுடுங்க என்று மன்னிப்பும் கேட்டான் அதற்க்கு அந்த மனிதர் இல்ல சார் நான் தான் தெரியாம இடிச்சிட்டேன் தப்பு என் மேல தான்னு மன்னிப்பு கேட்டார். அடுத்த நொடி இருவரும் அங்கிருந்து விலகி விட்டனர்.
அடுத்து....
வாங்கிங் முடிச்சு வீட்டுக்கு வந்து ஆபிஸ் போக நேரம் ஆச்சு. பரபரன்னு அப்ப தான் நாம பறப்போம். அப்படி அவர் கிளம்பும் போது தன்னுடைய சாக்ஸ் எங்கேயோ வச்சிட்டு தேடிட்டே அவர் மனைவியிடம் ஒரு கத்து கத்தரார். அத துவச்சு எங்க தான் வைப்பியோ தெரியல. தினமும் தேட வேண்டி இருக்குன்னு அவர் சொல்லி முடிக்கறதுக்குள்ள அந்த அம்மா அவர் தோள் மேலேயே இருந்த அந்த சாக்ஸை எடுத்துக் கையில கொடுக்கறாங்க.
வீட்ல இருந்து வெளிய வரும் போது ஆபிஸ்ல இருந்து போன். "எங்க இருக்கீங்க சார். அந்த இன்கம் டாக்ஸ் பைல் எங்க தான் வச்சிட்டு போனீங்க. இன்னைக்கு file பண்ணியாகணும் பொறுப்பா வைங்கன்னு சொல்லிட்டு தானே போனேன். ஒரு மணி நேரமா தேடறேன் கிடைக்கல" உடனே இவர் சார் உங்க டேபிள் மேலயே வச்சி இருக்கேன் சார் நீங்க
தேட கூடாதுன்னு. சாரி சார் அத உங்க கிட்ட சொல்லி இருக்கணும்ன்னு அதுக்கும் அவர் தன்னை விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்டார். சரி சரி உடனே ஆபிஸ் வரப் பாருங்க என்று சொல்லி அந்த போன் துண்டிக்கப் பட்டது.
எந்த உறவுமுறையும் இல்லாத யாரோ ஒருவரை லேசா அதுவும் தெரியாம இடிச்சதுக்கே நாம மன்னிப்பு கேட்கிறோம்.
நாம தான் இவங்க வாழ்க்கை நாம இல்லைன்ன இவங்க இல்லை என்று இருக்கும்
உறவுகளோடு கொஞ்சம் அன்பாக இருந்தால் தான் என்ன.
ஆபிஸ்ல நாம இல்லன்ன அந்த இடத்தில வேற யாரோ ஒருவர் நிச்சயமாக வந்து விடுவார். ஆனா உங்க பிள்ளைங்களுக்கு நீங்க தானே அப்பா என்ற ஸ்தானத்தை கொடுக்க முடியும். பெற்றோருக்கு அன்பான மகனாக, மனைவிக்கு ஆசையான கணவராக, பிள்ளைகளுக்கு பாசமான அப்பாவாக ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்களேன்.
அனைவருக்கும் ஏதோ கஷ்டங்களும் அதன் கவலைகளும் இருக்க தான் செய்யும். கவலைகள் இல்லாதவங்க இந்த உலகத்துல யாரும் இல்லை. தானாகவே வந்த கஷ்டங்கள் தானாகவே சென்று விடும்.
வாழும் வாழ்க்கை ஒரு முறை தான் அதை சந்தோஷமாக வாழலாமே.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment