Friday 18 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்லா கவனமா படிங்க.....
ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.
அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்...
ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...
"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.
ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...
இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...
வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவன்களாக மாறிவிடுகின்றன...
எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...
நிறைய யோசிக்க வைத்தது...!
- இலவச அரிசி வாங்கி, இலவச டிவி பார்க்கும், நம்ம ஊர் ஒரு சில மக்களுக்கும் இது தான் நடக்கிறது!
உழைக்கவே மனம் வருவதில்லை!
இலவசத்தால் பாதிப்பது நாம் மட்டும் அல்ல நம் அடுத்த தலைமுறையும் தான் என்பதை உணர்ந்து உழைப்போமாக.

No comments:

Post a Comment