Tuesday 22 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்களையோ உங்களுக்குப் பிடித்தவர்களையோ யாராவது ஏமாற்றினால் உங்களுக்கு என்ன கோபம் வரும். இன்று தமிழ் மக்கள் அனைவரையும் கேனையர்களாக்கி இருக்கிறது விஜய்டிவி. விஜய் டிவி சூப்பர் சிங்கரின் இறுதிச் சுற்று
, நண்பன் ஒருவன் மாங்கு மாங்கென்று தன் வாக்குகளை போட்டியாளர் அரவிந்த் அக்‌ஷனுக்கு அள்ளி வீசிக்கொண்டிருந்தான். மின்னஞ்சலில் ஐந்து ஓட்டுகள் போட்டது பத்தாது என்று எனது மின்னஞ்சல் கணக்கையும் கேட்டு "அரவிந்துக்கு ஓட்டு போடு டா" என நச்சரித்தான். 'யங் டேலண்ட்ஸ கொண்டு வர்ரதுல விஜய் டிவிக்கு நிகரில்ல, இந்த அரவிந்த் பெரிய சிங்கரா வருவான் பாரேன்' என்றவன் போதாக்குறைக்கு தனது அலைபேசியில் 100 ரூபாய் ரீசார்ஜ் செய்து எஸ் எம் எஸ் ஓட்டுகள் போட்டுத் தீர்த்தான். முடிவில் அரவிந்த் அக்‌ஷன் "சூப்பர் சிங்கம்" பட்டம் வென்று அருண் எக்ஸெல்லோ வின் வீட்டு மனையையும் வென்றார். இந்த அரவிந்த் அக்‌ஷன் என்பவர் யார் ? இவரது பிண்ணனி என்ன ? உண்மையான திறமை வென்றதா ? இந்த கேள்விகளின் மர்ம முடிச்சை நேற்று நண்பர் செல்வ மாரியப்பன் அனுப்பிய குறுஞ்செய்தி அவிழ்த்து அதிர்ச்சி அளித்தது. திறமையை கையில் வைத்துக் கொண்டு வாய்ப்புக்காக தவம் கிடக்கும் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் அல்ல இந்த அரவிந்த் அக்‌ஷன். பத்து எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, இவன் வேற மாதிரி, மத யானைக்கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களின் பிண்ணனிப் பாடகர் தான் இவர். வாசிக்கும்போதே அதிர்ச்சி அளிக்கிறதல்லவா. தமிழ் சினிமா அறிந்த ஒரு பாடகரை செல்லக்குரலுக்கான தேடல் என்று கதை கட்டி காதில் பூ வைத்து டைட்டில் பட்டம் கொடுத்திருக்கிறது விஜய் டிவி. அதற்கான ஆதாரங்கள் :
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்பதற்கு இன்னொரு அபத்தம் மிகுந்த சான்றாகி இருக்கிறது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. அரவிந்த் அக்‌ஷன் அவர்களே இந்தியாவின் முண்ணனி பிண்ணனி பாடகியான ஷ்ரேயா கோஷலுடனேயே பாடிய உங்களுக்கு இந்த போட்டி தேவை தானா.. இந்த டைட்டில் தேவை தானா.. உண்மையான திறமையை தூக்கிக்கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் திரியும் திறமைகள் எத்தனை எத்தனை தெரியுமா? உங்களைச் சொல்லியும் குற்றமில்லை நீங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு உங்கள் பிண்ணனியை மறைத்து இதோ தமிழகத்தின் செல்லக்குரல் என்று ஓலமிடும் ஊழல் ஊடகமான விஜய் டிவியை எந்த சாட்டையால் அறைவது என தெரியவில்லை. சூப்பர் சிங்கரின் முந்தைய சீசன் ஒன்றிலும் சம்பந்தமே இல்லாமல் வசதி படைத்த வெளிநாட்டு தமிழ்க்குழந்தைகள் இருவரை திடீரென இறுதிச் சுற்றுகளில் இறக்கி பணம் பார்த்தது விஜய் தொலைக்காட்சி நிறுவனம். போட்டியாளர்களை அழ வைத்து டிஆர்பி ஏற்றுவது, அவர்கள் வீட்டின் வறுமையை படம் பிடித்து ஆடியன்ஸை அழ வைப்பது, அவர்கள் குடும்பத்தில் இருக்கும் ஊனமான அம்மாவையோ அப்பாவையோ ஸ்டூடியோவுக்கு அழைத்து வருவது இப்படி மட்டமான யுக்திகளைக் கையாண்டு மக்களைக் கவர்வதற்கு பதில் நீங்கள் வேறு தொழில் செய்யலாம். விஜய் அவார்ட்ஸில் தான் வந்தவர்களுக்கெல்லாம் விருது வழங்கி அனுப்புகிறீர்கள் சரி, அது மேல் தட்டு நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் யாரையும் பாதிக்காது என விட்டு விடலாம். திறமையின் தேடல் என்று ஏன் அடித்தட்டு, மத்திய தர மக்களின் மடியில் கை வைக்கிறீர்கள்.. எனது தோழி ஒருத்தி சூப்பர் சிங்கரின் இந்த சீசனில் பாடி முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது. "நான் லாம் வேஸ்ட், எதுக்கும் லாயக்கில்ல" என அழுது புலம்பி அதிலிருந்து மீண்டு வரவே அதற்கு இரண்டு மூன்று நாட்கள் பிடித்தது. உன் திறமை ல நீ உறுதியா இரு, இந்த டிவி நிகழ்ச்சியலாம் நம்பாத என நண்பர்கள் ஆறுதல் சொல்லினர். அவர்கள் சொன்னது மிகச்சரியே.. இது போன்ற போலி புரோகிராம்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும், அது சரி திமுக வாலும் அதிமுக வாலும் சாணி அடி வாங்கியும் அவர்களையே மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் நமக்கு இந்த போலி நிகழ்ச்சிகள் எம்மாத்திரம்?

No comments:

Post a Comment