Wednesday 15 May 2024

நமது பாராட்டும் வாழ்த்தும். தேவகோட்டை இலுப்பைக்குடி கோவிலைச் சார்ந்த செல்வி லெட்சுமிஸ்ரீ புதுடில்லி அன்னை பன்னாட்டுப் பள்ளியில் (மதர்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்) படித்து , 2024 சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருக்கிறார். சி பி எஸ் சி அளவில் நகரத்தார் இனத்தில் முதலிடம் பெற்று உள்ளார். பள்ளியில் எல்லா பாடப் பிரிவுகளும் சேர்த்து இரண்டாம் இடமும் , வாழ்வியல் ( humanities l பிரிவில் முதல் இடமும் பெற்றிருக்கிறார் . ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலான பேச்சுப்போட்டி, தேசிய அளவிலான விவாதமேடை , கவிதை, சமூகசிந்தனைக் கட்டுரைகள் இவற்றில் மிகுந்த ஆர்வத்தில் கலந்து கொள்பவர். 2023 டிசம்பர் மாதம் புதுடில்லியில் நிகழ்ந்த தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான குறுக்கெழுத்துப் போட்டியில் , பலநிலைகளைக் கடந்து 38 குழுக்கள் பங்கேற்ற இறுதிச் சுற்றில் மூன்றாவது பரிசு பெற்றார். தந்தை லெட்சுமணன் இன்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட்டில் கார்ப்பொரேட் குவாலிடி மேனேஜர். தாயார் நித்யா வணிகவியல் பட்டதாரி. சிதம்பரம் நகரத்தார் சங்க முதல் செயலாளர், மேனாள் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் அரு.இராமநாதன் தந்தை வழி அய்யா. அப்பத்தா வேதியல் பட்டதாரி சௌந்தரலெட்சுமி திருவாசகம் மற்றும், திருப்புகழ் குழு ஒருங்கிணைப்பாளர். தாய் வழி அய்யா நடராசன் தமிழக மின்துறை பொறியாளர். ஆயாள் தெய்வானை ஆச்சி இல்லத்தரசி.


 

No comments:

Post a Comment