Saturday 1 August 2015

லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம் News & Photos

லோகமான்ய பாலகங்காதர திலகர் நினைவு தினக் கூட்டம்

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என முழங்கிய லோகமான்ய பாலகங்காதர திலகர் 95ஆம் ஆண்டு நினைவு தினக் கூட்டம் டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயற்குழு உறுப்பினர் ரெ.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. என்.முருகன் முன்னிலை வகித்தார். நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் “சுதந்திர வேள்வியில் ஆன்மிகம்” என்ற தலைப்பில் பேசுகையில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை எழுதியவர். நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் விரைவில் சுதந்திரம் கிடைக்கும் என்ற திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணர்த்தினார். மக்கள் வீடுதோறும் குடும்ப விழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார் என்றார். கூட்டத்தில் பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நவாப்ஜான், எழுத்தாளர் கோ.ஏகாம்பரம், ஏ.சி.பாபுலால், கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, வி.காளீஸ்வரன், குடந்தை ரெகுநாதன், ஆர்.ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜெ.ரவிசங்கர் நன்றி கூறினார். 



No comments:

Post a Comment