Monday 24 June 2013

Kaviarasu Kannadasan 87th Birthday Function





2 comments:

  1. கவியரசு என்றால் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி .


    கவியரசு என்றால் கண்ணதாசன் !
    கண்ணதாசன் என்றால் கவியரசு !

    "ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம்
    ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !

    "வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில்
    தோற்றவருக்குத் தெம்பு தந்தவன் நீ !

    "நான் மலரோடு தனியாக" பாடலில்
    நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !

    "மலர்களைப் போல் தங்கை" பாடலுக்கு
    மயங்காத உள்ளம் இல்லை உலகில் !

    "போனால் போகட்டும் போடா "பாட்டில்
    புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !

    "நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி
    நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன் !

    சித்தர்கள் பாடல்களை எளிமைப் படுத்தி
    சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !

    வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில்
    வற்றாத ஜீவ நதியாக வார்த்தவன் நீ !

    காதலின் வேதனையை பாட்டில்
    கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !

    ஆங்கில இலக்கியம் படிக்காத நீ

    ஆங்கில இலக்கியம் வென்றாய் பாட்டில் !

    சங்க இலக்கியத்தை திரைப்பாடலில் வைத்தாய்
    சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !


    கம்ப இராமாயண கருத்துக்களையும்
    கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !

    "படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்று
    படைத்தாய் இறவாத பாடல்களை நீ !

    எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி
    இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !

    உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர்
    உன் இடத்தை யாருமே எட்ட வில்லை !

    கவியரசு என்றால் கண்ணதாசன் !
    கண்ணதாசன் என்றால் கவியரசு !
    .

    ReplyDelete
  2. கவியரசர் ஒரு பல்கலைகழகம்.

    கன்னித்தமிழ் வந்து
    கண்ணதாசனிடம் சொல்-கலை பழகும்
    கற்றவர் அனைவருக்கும்
    கவியரசர் ஓர் பல்கலைகழகம்!

    கவியரசர் எழுத்துக்கள்
    வாழ்வின் பயிற்சிப்பட்டறை!
    காலந்தோறும் பாடமாகும்
    இவர் அனுபவக் கட்டுரை!

    கம்பனின் எழுத்தானிக்கும்
    கவியரசர் பேனாவிற்கும்
    கவித்தாயின் பேரருள்
    கட்டாயம் இருக்கும்!

    வடம்போட்டு இழுக்காமல்
    வார்த்தைகள் வருவதுண்டு!
    புடம்போட்ட பொன்னெழுத்தாய்
    புகழ்ப்பெற்று ஜொலிக்குது இன்று!

    -பி.கண்ணன்சேகர்.

    ReplyDelete